Editorial / 2026 மார்ச் 25 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

மலையகத் தமிழர்களை அவதூறாகப் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு எதிராக, சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மலையகச் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு செவ்வாய்க்கிழமை (24) அன்று நேரில் சென்று, 2007ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க ICCPR சட்டத்தின் கீழ் இந்த முறைப்பாட்டைச் சமர்ப்பித்தனர்.
சமீபத்தில் அர்ச்சுனா ராமநாதன் வெளியிட்ட கருத்துக்கள் மலையகத் தமிழர் சமூகத்தையே இழிவுபடுத்தும் வகையிலும், பிரதேசவாதத்தைத் தூண்டி சமூக அமைதியைச் சீர்குலைக்கும் விதத்திலும் அமைந்துள்ளதாக முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், இக்கருத்துக்கள் திட்டமிட்ட 'வெறுப்புப் பேச்சு' (Hate Speech) எனவும் அதில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொண்டு, சட்ட ரீதியாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிவில் சமூகப் பிரதிநிதிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
50 minute ago