Kogilavani / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
காதலிக்க வேண்டாம் என்று அறிவுறுத்திய ஆசிரியர்கள் இருவர், காதலர்களால் தாக்கப்பட்ட சம்பவம், பசறையில் இடம்பெற்றுள்ளது.
புதன்கிழமை (03) இடம்பெற்ற இச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியர்கள் இருவரும் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
பசறையிலுள்ள பிரபல பாடசாலையில் கல்விகற்கும் மாணவிகள் இருவர், இளைஞர்கள் இருவரை காதலித்து வந்துள்ளனர். இந்தக் காதல் விவகாரம் பாடசாலை ஆசிரியர்கள் இருவருக்கு தெரியவந்துள்ளது.
உடனடியாக மாணவிகளை அழைத்த ஆசிரியர்கள், கல்வியில் அக்கறை செலுத்தவேண்டும் என்றும் காதல் செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் என்று அறிவுரை கூறி எச்சரித்துள்ளனர்.
இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத மாணவிகள், இது குறித்து தங்களது காதலர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, இரண்டு இளைஞர்களும் ஆசிரியர்களைத் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026