2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

ஆசிரியர் உதவியாளர்களுக்கு 15இற்கு முன் நியமனம்

Kogilavani   / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாமிவேல் சுதர்ஷினி

பெருந்தோட்ட ஆசிரிய உதவியாளர்கள் 805பேருக்கான நியமனங்களை, ஜனவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தேசிய கல்வியற் கல்லூரிகளிலிருந்து பயிற்சி பெற்று வெளியேறிய 442 பேருக்கான நியமனம் நேற்று  செவ்வாய்க்கிழமை (29) கல்வியமைச்சில் வைத்து வழங்கப்;பட்டது. இந்நிலையில், பெருந்தோட்ட ஆசிரிய உதவியாளர்கள் 3021 பேரில் 805 பேருக்கான நியமனங்கள் வழங்கப்பாடாதுள்ளமை குறித்து வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'ஆசிரிய உதவியாளர்களுக்கு மூன்று கட்டங்களாக நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன. சில காரணங்களால் 805 பேருக்கான நியமனத்தில் தாமதம் ஏற்பட்டிருந்து. அவர்களுக்கான நியமனத்தை ஜனவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது' என மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .