2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஆசிரியர்களின் உன்னத சேவையைப் பாராட்டுகிறேன்

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 06 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

அறிவை தந்து உலகிற்கு நல்ல பிரஜையை உருவாக்கித் தரும் ஆசான்கள் மதிப்புக்குறியவர்கள்.ஆதலால் அவர்களை கௌரவித்து எடுக்கப்படும் சர்வதேச ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களின் உண்ணத சேவையைப் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவிப்பதில் தான் பெருமிதம் அடைவதாக, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது செயலாளருமான ஜீவன் தொண்டமான்  தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் அளப்பரிய சேவைகளுக்கு நன்றி சொல்லும் ஒரு நாளாக இத்தினம் கருதப்பட்டாலும், எந்நாளும் ஆசிரியர் தினங்கள் தான்.

உலகில் உள்ள நன்மை , தீமைகளைப் புரிந்து, சமூகத்திற்கேற்ற வகையில் பொருத்தப்பாட்டைக் கொண்ட, பண்பட்ட பிரஜையாக உருவாக்கும் பணியில் நல்ல ஆசிரியர் தன்னையே அர்ப்பணிப்பு செய்கின்றார் என்பதை ஞாபகப்படுத்துகிறேன்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X