2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

ஆசீர்வாதம் பெற சென்ற சா / த பரீட்சார்த்தி மரணம்

Janu   / 2024 மே 06 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் திங்கட்கிழமை (06) ஆரம்பமான 2023/2024 கல்விப்பொதுத் தராதார சாதாரண தரப்பரீட்சை சுமூகமான  முறையில் இடம்பெற்றது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், அந்த பரீட்சையில் தோற்றும் பரீட்சார்த்திகள், தங்களுடைய மத வழிபாட்டு இடங்களுக்குச் சென்று ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர்.

பலாங்கொட, மரதென்ன தெதனகல தமிழ் பாடசாலையில், கல்விப் பொதுத் தராதார பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவன்,  ஆலயம் ஒன்றிற்குச் சென்ற போது மயங்கி விழுந்து திங்கட்கிழமை (06) அதிகாலை படுக்கையிலேயே  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலாங்கொட மரதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த ஹரநாத் ரஞ்சித் குமார என்ற 17 வயதுடைய சிறுவனே இவ்வாறு மரணமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொட, பின்னவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X