2025 ஜூலை 12, சனிக்கிழமை

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 200 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Editorial   / 2017 ஒக்டோபர் 04 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மு.இராமச்சந்திரன் )

ஆடைத் தொழிற்சாலை  ஊழியர்கள் 200 பேர் வைத்தியசாலையில் அனுமதி


நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளி பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான ஆடைத்தொழிற்சாலையில், கடமையில் இருந்த பெண்கள் மயக்கமுற்ற நிலையில், ​டிக்கோயா மாவட்ட வைத்தியசா​லையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தொழிற்சாலையில் பணிபுாிந்த சுமார் 200 பெண்கள் வரையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆடைத் தொழிற்சாலையில் வழங்கப்பட்ட காலை உணவு ஒவ்வாமை காரணமாகவே, அவர்கள் மயக்கமுற்றிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.


ஆடைத் தொழிற்சாலை  ஊழியர்கள் 100 பேர் வைத்தியசாலையில் அனுமதி
 
ஹற்றன், நோர்வூட் நகரத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் உள்ள ஊழியர்கள் பலர், இன்று (04) காலை மயக்கமுற்று விழுந்துள்ளனர். இவர்களில் சுமார் 100 பேர் வரையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மேலதிக விபரங்களை எதிர்பாருங்கள்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .