Kogilavani / 2017 ஓகஸ்ட் 29 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொரிஸ் என்டனி
இரத்தினபுரி, பொத்தகந்த இந்துருஹேன பகுதியிலிருந்து, நொரகல்ல தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான இராமசாமி விஜயராஜ் (வயது 35) என்பவரின் சடலத்தை, இரத்தினபுரி பொலிஸார், திங்கட்கிழமை இரவு மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர், கொலைசெய்யப்பட்டிருக்கலாமென்று தெரிவித்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.
மேற்படி நபரை, குறித்த தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர் திங்கட்கிழமை காலை வீட்டிலிருந்து அழைத்துச் சென்றதாகவும், இரவாகியும் வீடு திரும்பாத நிலையிலேயே, வீட்டிலிருந்து அரை கிலோமீற்றர் தொலைவிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளரென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
13 Apr 2026