Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Editorial / 2021 பெப்ரவரி 18 , மு.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படாமல், 1,000 ரூபாய் வழங்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்த பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ், அவ்வாறு வழங்கினால் மாத்திரமே, அது அரசாங்கத்தின் வெற்றியாகும். இல்லையேல் பெருந்தோட்ட மக்களின் 1,000 விடயத்திலும் அரசாங்கம் 'பெயிலாகி'விடும் என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், பெருந்தோட்ட மக்களுக்கான 1,000 ரூபாய் அடிப்படைச் சம்பளம் என்பது, ஜனாதிபதி தேர்தல் மேடைகளிலும், வரவு –செலவுத் திட்ட உரையிலும் அரசியல் ரீதியாக வழங்கப்பட்ட வாக்குறுதியாகும். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற 1,000 ஆயிரம் கதைகள் கதைக்கப்படுகின்றன என்றார்.
வரவு – செலவுத் திட்ட உரையின் முன்மொழிவுகள், அத்திட்டம் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்தே அமுலாகும். ஆனால், 1இ000 ரூபாய் முன்மொழிவு அரசியல் ரீதியாக வழங்கப்பட்டது. அதனால்தான், அது அமுல்படுத்தப்படவில்லை என்றார்.
கதைகளையும் வரலாறுகளையும் பேசி, சிலர் காலம் தாழ்த்துகின்றனர்.
இன்று வாழ்க்கைச் செலவு வானளவு உயர்ந்தவிட்டது. பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரம் மிகவும் சிக்கலை எதிர்நோக்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.
மக்களுக்கு பாரிய சுமை ஏற்பட்டுள்ளது. வாழ்வா, சாவா என்ற நிலையில் மக்கள் இருப்பதால், 1,000 ரூபாய் சம்பளத்துக்கு அரசாங்கம் கட்டளையிட வேண்டும். ஆனால், ஆடத்தெரியாதவனுக்கு மேடை கோணல். என்பது போல 1,000க்கு ஆயிரம் கதைகளைக் கூறுகின்றனர் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
41 minute ago
2 hours ago
3 hours ago