Kogilavani / 2021 மார்ச் 28 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சுஜிதா, துவாரக்ஷன்
தலவாக்கலை புகையிரதத் நிலையத்திற்குச் சொந்தமான ஆயுதக் களஞ்சியசாலை திடீரென, இன்று மதியம் தீப்பற்றியுள்ளது.
தலவாக்கலை புகையிரத நிலைய உத்தியோகத்தர்கள் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு தீயை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
புகையிரதப் பாதையை செப்பனிடும் பணிகளுக்காக பயன்படுத்திய ஆயுத களஞ்சியசாலையே, இவ்வாறு தீ பிடித்துள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. கடும் மழைக்கு மத்தியில் புகையிரத நிலைய உத்தியோகத்தர்கள் மழைநீரை கொண்டும் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும் அங்கு இருந்த ஆயுதங்கள் பெரும்பாலானவை தீக்கிரையாகி உள்ளன என புகையிரத நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago