Sudharshini / 2016 ஜூன் 07 , மு.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித்ராஜபக், எஸ்.கணேஷன்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, கவரவில பீ பிரிவைச் சேர்ந்த வெள்ளையன் பாக்கியம் என்ற 71வயது வயோதிபப் பெண் ஒருவர், மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் சாமிமலை கவரவில ஆற்றில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை (07) சடலமாக மீட்கப்படுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பிரதேச மக்கள் மஸ்கெலியா பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
மேற்படி பெண் இன்று காலை 07 மணியளவிருந்து வீட்டில் இருக்க வில்லை என உயிரிழந்த பெண்ணின்; மகன் தெரிவித்தார். எனினும், இன்று காலை 8.30 மணியளவில் சடலம் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹட்டன் நீதவான் மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
12 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago