Janu / 2026 ஜனவரி 04 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாவட்டம் அக்கரப்பத்தனை, ஆக்ரா தோட்டப் பகுதியில் உள்ள, ஆக்ரா ஆற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் சனிக்கிழமை (03) அன்று மீட்கப்பட்டுள்ளது.
மூன்று பிள்ளைகளின் தாயான 85 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆற்றில் சடலமொன்று மிதந்து வருவதை கண்ட அப் பகுதி விவசாயிகள் வழங்கிய தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த அக்கரைப்பத்தனை பொலிஸார் சடலத்தை மீட்டு, மரண விசாரணைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைத்துள்ளனர் .
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செ.தி. பெருமாள்

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .