Kogilavani / 2021 மார்ச் 07 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேன் செனவிரத்ன
கட்டுகஸ்தொட்ட, சியம்பலாகஸ்தென்ன கத்தோலிக்க தேவாலயத்துக்கு, சந்தேகத்துக்கு இடமான முறையில் வந்த பெண்ணொருவரை, கட்டுகஸ்தோட்டை பொலிஸார், நேற்று (7) கைதுசெய்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் நிறுத்துமாறு வலியுறுத்தி கத்தோலிக்க திருச்சபை அறிவித்திருந்த கருப்பு ஞாயிறு போராட்டம், நேற்று (7) முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஆலய பங்கு மக்கள் கருப்பு ஆடைகளை அணிந்து, ஆராதனைகளில் பங்கேற்றனர். இந்நிலையில் மேற்படி ஆலயத்துக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
ஆலயத்துக்கு வந்தவர்கள் ஆள் அடையாளம் உறுதிபடுத்தப்பட்டதன் பின்னரே ஆலயத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், சந்தேகத்துக்கு இடமான முறையில் மேற்படி பெண் ஆலயத்துக்கு நுழைய முற்பட்டபோது, ஆலயத்தின் வாஸஸ்தலத்தில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், அவரது மருத்துவ அறிக்கையைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையில், பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026