Editorial / 2021 மே 22 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியா மாநகர சபை பொது சுகாதார பிரிவுக்கு உட்பட்ட ஆவாஎலிய? நவகம்கொட கிராமத்தைச்சேர்ந்த 81 வயதான ஆணொருவர், கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 18 ஆம் திகதி நுவரெலியா பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி (22) மதியம் இவர் உயிரிழந்துள்ளார்.
“உயிரிழந்த மேற்படி நபருக்கு மேற் கொள்ளப்பட்டிருந்த பி.சி.ஆர் பரிசோதணையில் இவருக்கு கொரோனா தொற்று உறுதிப்பத்தப்பட்டது” என நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை பொது சுகாதார உதவி பணிப்பாளர் வைத்தியர் மதுர செனிவிரத்ன தெரிவித்தார்.
அந்த வகையில் நுவரெலியா மாநகர சபைக்கு உட்பட்ட ஆவாஎலிய நவகம்கொட கிராமத்தில் முதலாவது கொரோனா உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக மாநகர சபை பொது சுகாதார பரிசோதகர் பிட்டிகல. தெரிவித்தார்.
49 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago