மு.இராமச்சந்திரன் / 2017 டிசெம்பர் 03 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சேவல் சின்னத்தின் கீழ்அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இணைந்து பல இடங்களில் போட்டியிடவுள்ளது.
இதுதொடர்பான வேட்பு மனு கையெழுத்திடும் நிகழ்வானது கட்சியின் பொதுச்செயலாளர் ஆறுமுகம் தொண்டமான் தலைமையில் இன்று (3) கொட்டகலை சி.எல்.எப் காரியாலயத்தில் இடம்பெற்றது.
கொழும்பு,கொலன்னாவை,வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இணைந்து சேவல் சின்னத்தில் போட்டியிடுவதுக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுச்செயலாளர் பிரபா கணேசன் மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
23 minute ago
35 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
35 minute ago
53 minute ago