Sudharshini / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
'வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தற்போது பலர், குழுக்களாகப் பிரிந்து செயற்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனை ஆரோக்கியமானதாக நான் கருதவில்லை. கடந்த காலங்களில் மலையக தலைவர்கள் பிரிந்து நின்று செயற்பட்டதன் காரணமாகவே அபிவிருத்திகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், நாம் இன்று ஓரணியில் அதாவது, 'தமிழ் முற்போக்கு கூட்டணி' என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தி ஒற்றுமையாக செயற்படுவதன் மூலமாகவே பல வெற்றிகளை பெற்றுக்கொண்டுள்ளோம்' என இராஜாங்க கல்வி அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, கல்வி அமைச்சில் இன்று காலை (29) நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் ஆணையை பெற்றுக் கொண்ட ஓர் அமைப்பாக அனைவரையும் இணைத்துச் செயற்படுகின்றது. குறிப்பாக அதன் தலைவராக செயற்படுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன், மிகுந்த அனுபவம் நிறைந்த ஒருவர்.
அது மட்டுமல்லாமல் அவருடன் துறைசார்ந்த வல்லுநர்களும் இணைந்திருக்கின்றார்கள். சர்வதேசம் அவர்களை ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, அவர்களுடன் இணைந்து அனைவரும் செயற்பட்டு அந்த மக்களின் உரிமைகளைப் பெற்றுகொடுப்பதுடன் தேவைகளையும் நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும்' என்றார்.
'எதிர்காலத்தில் கல்வித்துறையில் நிலவும் குறைபாடுகள் அனைத்தையும் படிப்படியாக நிவர்த்தி செய்துகொள்ள நாம் தற்பொழுது நடவடிக்கை எடுத்து வருகின்றோம்' என்று அமைச்சர் மேலும் கூறினார்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago