2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இந்திய வீடமைப்பு: திட்டம் தொடரும்

Kogilavani   / 2017 மார்ச் 06 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.ஷங்கீதன்

இந்திய வீடமைப்பு திட்டத்தை, இந்திய அரசு, பரீட்சார்த்தமாகவே மலையக பகுதிகளில் நடைமுறைபடுத்தி வருகின்றது. இந்தத் திட்டம் வெற்றி பெறுகின்ற பட்சத்தில், இன்னும் பல வீடமைப்பு திட்டங்களை, எதிர்காலங்களில் இங்கு நடைமுறைப்படுத்தவுள்ளதாக, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்தார்.

இந்திய அரசின் நிதியுதவியில், பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில், முன்னெடுக்கப்பட்டு வரும் வீடமைப்பு திட்டத்தின் நிர்மாணப் பணிகளை, பார்வையிட்டதன் பின்னர் கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

'இந்திய வீடமைப்பு திட்டத்தில், பெண்களின் பங்களிப்பே அதிகம் உள்ளது.   இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கின்ற வீடுகளை, பாதுகாத்துகொள்ள வேண்டிய பொறுப்பு, பெண்களிடமே உள்ளது.

எந்த காரணம் கொண்டும், இதனை அடகுவைப்பதற்கோ அல்லது விற்பனை செய்வதற்கோ, யாரும் முயற்சி செய்யக் கூடாது. இதனை சரியாக பராமரித்து, எதிர்கால சந்ததிக்கு கையளிக்க வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X