Sudharshini / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய வம்சாவளி மக்களை எவ்வாறு அழைப்பது என்ற சர்ச்சை உருவாகியுள்ளது. அவர்களை மலையக மக்கள் என்று அழைக்க வேண்டும் என ஒரு சாரார் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இந்திய வம்சாவளி மக்கள் என்ற அடையாளத்தை நாம் இழப்போமானால் அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தம் என முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் வெளியீட்டுள்ள ஊடக அறிக்கையிலே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தங்களை இலங்கைத் தமிழர் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக வாழ்ந்து வருகின்றார்கள். மலையகத்தை தவிர்த்து கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல் என அனைத்து பகுதிகளிலும் பரவலாக வாழும் இந்திய வம்சாவளி மக்களை, மலையக மக்கள் என்று குறிப்பிடுவது பொருத்தமாக அமையாது.
மேற்குலக நாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்களை இந்திய வம்சாவளி என்று பெருமையாக அழைத்துக் கொள்கின்றார்கள். அதேபோல், மலேசியத் தமிழர்களும் தங்களை இந்திய வம்சாவளி தமிழர்கள் என்றே அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். இந்திய வம்சாவளி என்ற அடைமொழியுடன் நாம் இருப்போமேயானால் தான் தெற்காசியாவில் பலம் மிக்க வல்லரசான இந்தியாவின் உதவிகளை என்றும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
இன்று தேசிய கீதம் தமிழில் பாடியதை வெகுவாக பாராட்டும் நல்லாட்சியை சேர்ந்த தமிழ் தலைமைகள், இனப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுவிட்டதைப் போன்று ஒரு மாயையை உருவாக்கி வருகின்றார்கள். நாட்டில் ஒரு தேசிய கீதமே இருக்க வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.
ஏற்கெனவே இருக்கும் சிங்கள மொழியிலான தேசிய கீதத்தில் தமிழ் பேசும் மக்களாகிய எங்களது விகிதாசாரபடி 25 சதவீதம் தமிழ் சொற்களை உள்வாங்குவதன் மூலமாகவே இன ஐக்கியத்தை ஏற்படுத்த முடியும். அவ்வாறு இடம்பெறுமாயின் தமிழ் மொழியிலான வசனங்களை இந்நாட்டில் வாழும் ஒரு கோடியே அறுபது இலட்சம் சிங்கள மக்கள் படிக்க வேண்டி வரும். இதுவே, இன ஐக்கியத்தை உருவாக்கக் கூடியதாக அமையும்' என குறிப்பிட்டிருந்தார்.
6 minute ago
18 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
18 minute ago
30 minute ago