2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

‘இந்தியாவின் உதவிகள் இலங்கைக்கு உந்துசக்தி’

Editorial   / 2019 மார்ச் 25 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்

இந்திய அரசாங்கமானது, இலங்கைக்கு பல்வேறு வகையிலும் உதவி வருகின்றதென்றும் இந்த உதவிகள், இலங்கையின் அபிவிருத்திக்கு உந்துசக்தியாக அமைந்துள்ளதென்றும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

இந்திய அரசாங்கத்தால், கொத்மலை, எல்பொட தோட்டத்தில் அமைக்கப்பட்ட வீடுகளை, பயனாளிகளுக்குக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

அங்கு தொடர்ந்துரைத்த அவர் மேலும் கூறுகையில், “இந்திய அரசாங்கம் இலங்கைக்கு பல்வேறு வழிகளிலும் உதவிகளை செய்து வருகின்றது. அந்த வகையில், வீடமைப்புத் திட்டம், அம்பியுலன்ஸ் சேவை என்பன மிகவும் குறிப்பிடக்கூடிய விடயங்களாகும். இதைத் தவிர இன்னும் பல உதவிகளையும் செய்து வருகின்றது. 

“இந்த உதவிகளில் அநேகமான உதவிகளை, மீள செலுத்த வேண்டியத் தேவை இலங்கை அரசுக்கு இல்லை. இந்திய அரசின் உதவிகள், எமது பொருளாதாரத்துக்குப் பாரிய உந்து சக்தியாக அமைந்துள்ளன. எனவே, இந்தியாவின் உதவிகள் எங்களுடைய பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவதற்கு பெரும் உந்து சக்தியாக அமைகின்றன. ஆனால், ஏனைய நாடுகள் வழங்குகின்ற உதவிகளை, அவர்களுக்கு வட்டியுடன் மீள செலுத்துகின்ற போது, எமது நாட்டின் பொருளாதாரம் பாதிப்படைகின்றது” என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .