Kogilavani / 2016 பெப்ரவரி 05 , மு.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

'இனவாதம், மதவாதம், மொழிவாதம் பேசுபவர்களை, ஏதோ ஒரு நோயினால் பாதிக்கப்பட்டவர்களாகவே கருத வேண்டியுள்ளது. இந்த இனவாத நோயை குணமாக்கினால்தான் நாட்டுக்கு நிம்மதி, அமைதி கிடைக்கும். இதற்காக அனைவரும் பிரார்த்திப்போம்' என இரத்தினபுரி மறை மாவட்ட குரு முதல்வர் அதிவண. டேமியன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
சௌமிய இளைஞர் நிதியத்தின் தலைவர் எஸ்.பி.அந்தோனிமுத்து, மரியாயின் சேனை அங்கத்தவர்களுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சுதந்திர தின நிகழ்வு, யட்டியாந்தோட்டை புனித மரியாள் தேவாலயத்தில் நேற்று(4) காலை இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
'தேசிய கீதத்தை தமிழ்மொழியில் பாடுவது தவறு என்று பலர் இனவாத கீதம் பாடுவதானது, இந்நாட்டில் இன்னும்; யுத்தம் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்துகின்றது.
இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது இலங்கைக்கு ஜப்பான் குண்டு வீசியது. அன்று கொழும்பில் ஆயராகவிருந்த அதிவண.கலாநிதி பயஸ் ஆண்டகை, இந்த யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்று நேர்த்திக்கடன் வைத்ததுடன் தேவ அன்னைக்கு மாபெரும் தேவாலயத்தை கட்டி எழுப்புவதாகவும் வேண்டுதல் வைத்தார். இரண்டாம் உலக மகா யுத்தம் நிறைவடைந்த பின்னர் அவர் கூறியப்படி கட்டி எழுப்பப்பட்டதே„தேவத்தை பெசிலிக்கா தேவாலயம். இரண்டாம் உலக மகா யுத்தம், முடிவடைந்துவிட்டது. ஆனால், எமது நாட்டில் இன்னும் யுத்தம் நடைபெறுவதை இனவாதிகள் தேசிய கீதத்தை தமிழில் பாடக்கூடாது என்று கூறுவதனூடாக உறுதிபடுத்துகின்றனர்' என்றார்.


27 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
8 hours ago