Kogilavani / 2021 மார்ச் 21 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
இரசாயனப் பாவனையில், இரத்தினபுரி மாவட்டம் முதலிடத்தில் உள்ளதாகவும் இதனால், ஆறுகள், நீரூற்றுக்கள், நீர்நிலைகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் மாலனி லொகுபோதாகம தெரிவித்தார்.
'சுரகிமு ஸ்ரீலங்கா' வேலைத்திட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், இரத்தினபுரி மாவட்டச் செயலகத்தில், நேற்று முன்தினம் (20) நடைபெற்றபோதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்துரைத்த அவர், இம்மாவட்டத்தில் தேயிலை உற்பத்தி உட்பட ஏனைய விவசாயச் செய்கைகள் அதிகம் இடம்பெறுவதால், இவற்றுக்குத் தேவையான இரசாயனப் பசளைகள், பூச்சிக் கொல்லிகள் போன்றவற்றின் பாவனை அதிகம் உள்ளதாகவும் இவற்றின் தாக்கம், மண், நீர்நிலைகளிலும் கலந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
'இரத்தினபுரி மாவட்டம், ஆறுகள், குளங்கள் நீரூற்றுகள் அதிகமாகக் காணப்படுகின்ற பிரதேசம் என்பதுடன், 4,000 மில்லிமீற்றர் மழை, வருடாந்தம் பொழிகின்ற இலங்கையின் பிரதான ஆறுகளான களுகங்கை, வளவை ஆறுகள் உட்பட கிளை ஆறுகள் பலவற்றைக் கொண்ட பிரதேசமாகும்.
'எனவே இரசாயன பசளை பாவனையால் வெளியாகும் நச்சுகள் மேற்படி நீர்வளங்களில் பரவுவதைத் தடுக்க முடியாது. இரசாயன மூலங்கள், எமது பிரதேசத்தின் நீர் ஊற்றுகளில் தாக்கத்தை ஏற்படுகின்றன. எனவே விவசாயிகள் அசேதன பசளைகளின் பாவனையைக் கட்டுப்படுத்தி, சேதனப் பசளைகளின் பாவனையை அதிகரிக்க வேண்டும்' அவர் தெரிவித்தார்.
8 hours ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
21 Jan 2026
21 Jan 2026