Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 11 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேறுவதற்கு முன்பாக அரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்ட 50 ரூபாய் மேலதிகக் கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றுத் தெரிவித்துள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், தற்போது, நாணய சுழற்சியில் வென்றுள்ளதாகவும், களத்தில் துடுப்பெடுத்தாடி, ஆட்டத்திலும் வெற்றிபெறுவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர், கூட்டு ஒப்பந்தத்தினூடாக மலையக மக்களை தனியார் கம்பனிகளிடம் ஒப்படைத்துவிட்டு, பொறுப்பற்றிருந்த அரசாங்கத்தை, பொறுப்புக்கூற வேண்டிய கட்டத்துக்கு இழுத்து வந்திருக்கிறோம்.
கூட்டணியின் நாடாளுமன்ற செயற்பாடுகளால், முன்னெப்போதும் இல்லாதவகையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலையக மக்கள் தொடர்பில் நாடாளுமன்றில் பேசிவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது மலையகம் குறித்த நாடாளுமன்ற மறுமலர்ச்சி காலம் எனவும் எனினும், எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் இலாபத்துக்காக மலையக மக்கள் தொடர்பில் நாடாளுமன்றில் பேசுவதாகவும் சாடியதுடன், மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி, மலையகத் தமிழ் மக்களை எவ்வாறு நடத்துவார் என்பது, எல்லோரும் அறிந்ததே என்றும் தெரிவித்தார்.
இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்திலும் பெருந்தோட்ட பகுதியில் அமைந்துள்ள பாடசாலைகளின் அபிவிருத்திக்கு 245 மில்லியனும், நுவரெலியா மாவட்டத்தில் மும்மொழி தேசிய பாடசாலை அமைக்க 400 மில்லியனும் ஊவா, மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மாகாணங்களில், ஆரம்ப வைத்திய நிலையங்களை அபிவிருத்திச் செய்வதற்காக 1,625 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளதென்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஸ்ரீ பாத தேசிய கல்வியியல் கல்லூரியின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்குத் தேவையான நிதியை ஒதுக்குமாறு கல்வி அமைச்சரிடம் வேண்டுகோளை முன்வைப்பதாகவும் தமிழ்மொழி மாணவர்கள் 75 சதவீதமும் சிங்கள மொழிமூல மாணவர்கள் 25 சதவீதமும் குறித்த கல்லூரியில் அனுமதிக்கப்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டு அறிக்கையில், மலையக மக்களுக்கு சேவையாற்றவென அரசாங்கத்தின் பொறுப்பில் இயங்கும் நாடாளுமன்றத்துக்கு பொறுப்பு கூறும்” புதிய கிராம அதிகார சபை” ஒன்று இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்றார்.
2 minute ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
2 hours ago
5 hours ago