2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

இரத்தினபுரியில் 1,510 பேருக்கு டெங்கு

Kogilavani   / 2017 மே 02 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத்தில், டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்கள், அதிகம் இனங்காணப்பட்ட மாவட்டமாக, இரத்தினபுரி மாவட்டம் உள்ளது.  
இம்மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களில் 1,510 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தனர் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இதேவேளை, கண்டி மாவட்டத்தில் 1,142 பேரும், கேகாலை மாவட்டத்தில் 1,011 பேரும், டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.   
கடந்த நான்கு மாதங்களில் பதுளை மாவட்டத்தில் 596 டெங்கு நோயாளர்களும் மாத்தளையில் 434 பேரும், மொனராகலையில் 388 பேரும், நுவரெலியாவில் 153 பேரும் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .