Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Gavitha / 2020 நவம்பர் 23 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
சப்பிரிகம எனும் வேலைத்திட்டத்தினூடாக, இரதல்ல கீழ்ப்பிரிவு தோட்டக் கோவிலுக்குச் செல்லும் பிரதான பாதையை, 10 இலட்சம் ரூபாய் செலவில் கொங்கிரீட் பாதையாக அமைத்துக் கொடுப்பதற்கு, நுவரெலியா பிரதேச சபை முன்வந்துள்ளது.
தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய, நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ், இதற்கான ஏற்பாடுகளை, இன்று (23) முன்னெடுத்தார்.
அதேநேரத்தில் நானுஒயா-இரதல்ல கீழ்ப் பிரிவு தோட்டத்தில், பொதுமக்கள் தினமும் பாவிக்கும் வீதிகளை புனரமைப்பு செய்வது தொடர்பில், அங்குள்ள இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நீண்டகாலமாக முறுகல் நிலை தோன்றியுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு, குறித்தத் தோட்டத்துக்கு நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் நேரில் சென்று, அங்குள்ள மக்களுடனும் இளைஞர்களுடன் சுமூகமான முறையில் கலந்துரையாடினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
53 minute ago
3 hours ago