Kogilavani / 2021 மார்ச் 29 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இக்பால் அலி
கொரோனா வைரஸ் பரவல் நிலைமையை அடுத்து, இரத்த வங்கிகளில் ஏற்பட்டுள்ள இரத்தம் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், இரத்ததான முகாமொன்று, அக்குறணை கசாவத்தை ஆரம்பப் பாடசாலையில், நடைபெற்றது.
அக்குறணை பிரதேச தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீனின் அனுசரணையுடன் அக்குறணை கசாவத்தை இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில், இந்த இரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன், தானும் இரத்தம் வழங்கி சிறப்பித்தார்.
அத்துடன் அக்குறணை கசாவத்தை இளைஞர் மன்ற அமைப்புக்கும் ஒரு தொகை நாற்காலிகளை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், கண்டி வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்தியர்கள், உதவியாளர்கள் கலந்துகொண்டு, இரத்தம் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago