2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

இரத்தினபுரி தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

Kogilavani   / 2021 மார்ச் 18 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி, பலாங்கொடை, பெல்மதுல்ல, இறக்குவானை ஆகிய தோட்டப்புறங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான கூட்டம், இலங்கைத் தொழிலாளர் காங்கிஸின் பொதுச்செயலாளரும் இராஜங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் அமைச்சின் அலுவலகத்தில், நேற்று (18) நடைபெற்றது.

இதன்போது குறித்து தோட்டங்ளிலே தொழிளாலர்கள் எதிர்நோக்கும் சுகாதாரம், வீடமைப்பு, கல்வித்துறை போன்ற அபிவிருத்திகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. 

இப்பிரதேசங்களுக்கு இந்திய வீடமைப்புத் திட்டத்தினூடாக வீட்டுத்திட்டத்தை ஆரம்பிப்பதுத் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. 

அப்புகஸ்தன்னை தோட்ட வைத்தியசாலை கவனிப்பாரற்ற நிலையில் கடந்த முன்று, நான்கு வருடங்களாக மூடப்பட்டிருப்பதுத் தொடர்பில் அமைச்சரின் கவனத்துக்குக்  கொண்டுவந்ததையடுத்து, உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் கலந்துரையாடி வெகுவிரைவில் தீர்வு பெற்றுத் தருவதாக அமைச்சர் உறுதியளித்தார்.

இக்கலந்துரையாடலில் பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், இ.தொ.காவின் சிரேஷ்ட இயக்குநர் ராஜமனி குறித்த தோட்டத்தின் தலைவர்கள், தலைவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X