2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

இரத்தினபுரி நகரில் மிருக வைத்தியசாலை

Kogilavani   / 2021 மார்ச் 04 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், இரத்தினபுரி நகரில் மிருக வைத்தியசாலையொன்று அமைக்கப்பட்டுள்ளதாக, இரத்தினபுரி மாவட்ட கால்நடைகள் மிருக வைத்தியத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவின் வழிநடத்தலின் கீழ், இந்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் பணிகள் எதிர்வரும் வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இந்த வைத்தியசாலையில், வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகள்,  செல்லப்பிராணிகள், பறவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X