2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

இரத்தினபுரி மாவட்டத்தில் 19,074 பேர் பாதிப்பு

Editorial   / 2020 மே 22 , பி.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

இரத்தினபுரி மாவட்டத்தில், 19ஆம் திகதி ஏற்பட்ட வெள்ளம், காற்று, மண்சிரிவு அனர்த்தங்கள் காரணமாக இம்மாவட்டத்தில் 17 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இன்று(22) மாலை 5.00 மணி வரை கிடைத்த தகவலின்படி, இரத்தினபுரி மாவட்டத்தில் 5,032 குடும்பங்களைச் சேர்ந்த 19,074 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் மாலணி லொக்குபோதாகம தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்தங்கள் குறித்து, இன்று(22) மாலை ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

இம்மாவட்டத்தில் 575 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளதுடன் அதில் 284 கிராம சேவகர் பிரிவுகளில் அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளதுடன் 5,032 குடும்பங்களை சேர்ந்த 19,074 பேர் பாதிக்கப்பட்டுனர் என்றார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்தங்களால், இதுவரை மூவர் உயிரிழந்துள்ளதுடன் இவர்களில் இருவர் இரத்தினபுரி பிதேச செயலக பிரிவை சேர்ந்தவரும் என்றும் மற்றையவர் பெல்மதுளை பிரதேச பிரிவை சேர்ந்தவர் என்றும் தெரியவருகிறது. 

இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்தங்களில்,  22 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் பகுதியளவில் 1,872 வீடுகள் சேதமாகியுள்ளன.  இம்மாவட்டத்தில் ஏனைய சொத்துகள் 446 சேதமாகியுள்ளன.

அனர்த்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட 64 குடும்பங்களைச் சேர்ந்த 228 பேர், தத்தமது உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளார்கள்.

29 குடும்பங்களைச் சேர்ந்த 117 பேர், 6 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று, இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் மாலணி லொக்குபோதாகம மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .