Editorial / 2020 மே 24 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஜித்லால் சாந்த உதய
இரத்தினபுரி மாவட்டத்தில் மழை வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு, வெள்ளம், கடுங்காற்று காரணமாக பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களைச் சேர்ந்த 122 பேர், ஆறு இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று, இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் மாலனி லொக்குபோதாகம தெரிவித்தார்.
பலாங்கொடை, பெல்மடுல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் நான்கு முகாம்களும் அயகம, இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா ஒரு முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மேற்படி மாவட்டத்தில், 19 ஆம் திகதி முதல் இதுவரை ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்கள் காரணமாக, 5,124 குடும்பங்களைச் சேர்ந்த 19,337 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.
அனர்த்தங்களால், மூவர் மரணமடைந்துள்ளதுடன், 1,954 வீடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago