Editorial / 2020 மே 21 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
இரத்தினபுரி மாவட்டத்தில், கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால், டெங்கு பரவும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரத்தினபுரியிலுள்ள தாழ் நிலங்களில் நீர் தேங்கியுள்ளதாலேயே இந்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும் இவ்வாறு ஒவ்வொரு மழைக்காலத்தின் பின்னரும் டெங்கு அச்சுறுத்தல் ஏற்படுவது வழமையான செயற்பாடு என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாட்டில் இந்த வருடத்தில் மாத்திரம்,இதுவரையில் 19,446 டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஏப்ரல் மாதத்தில் மாத்திரம், 463 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் மே மாத ஆரம்பத்தில் இருந்து மாத்திரம், 457 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் சப்ரகமுவ மாகாண சுகாதார திணைக்களத்தின் தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் டெங்கு, கொவிட்-19 போன்ற நோய் பரவாமல் இருப்பதற்கு சுகாதாரத் துறையினரால் வழங்கப்படும் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 hours ago
8 hours ago
9 hours ago
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago
17 Apr 2026