2025 மே 08, வியாழக்கிழமை

இரத்தினபுரியில் 7 கொத்தணியில் 92 பேர் சிக்கினர்

Kogilavani   / 2020 நவம்பர் 08 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஜித்லால் சாந்தஉதய

இரத்தினபுரி மாவட்டத்தில், ஏழு கொரோனா கொத்தணிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றினூடாக இதுவரை 96 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உள்ளடங்களாக 1626 குடும்பங்களைச் சேர்ந்த 5,136 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் மாலனி லொகுபோதாகம தெரிவித்தார். 

இரத்தினபுரி மாவட்டத்தில் 10 செயலாளர் பிரிவுகளில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காண்பட்டுதுடன் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களின் கொரோனா கொத்தணி, பிரண்டெக்ஸ் கொரோனா கொத்தணி, போட்லய்ன் கொரோனா கொத்தணி, பேலியாகொட மீன்சந்தை கொரோனா கொத்தணி, கஹத்துடுவ ஹய்டாமனி கொத்தணி என ஏழு கொத்தணிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X