2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

இரவு உணவகங்களில் திடீர் சோதனை

Kogilavani   / 2021 மார்ச் 02 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

எம்பிலிபிட்டிய நகரில், இரவு நேரங்களில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் உணவகங்கள் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன என்று,  பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். 

எம்பிலிப்பிட்டிய, உடவலவ, பல்லேகம ஆகிய  பொதுசுகாதாரப் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகளே, இவ்வாறான சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரவு உணவுக்காக தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள், அவற்றின் தரம், சுவை, சுத்தம், உணவு பறிமாறப்படும் முறை, உணவு வகைகள் தயாரிக்கும், விநியோகிக்கும் ஊழியர்களின் சுத்தம், அவர்கள் அணிய வேண்டிய சுகாதார மேலங்கிகள் போன்ற  விடயங்கள் தொடர்பில் கண்காணிக்கப்பட்டன.

உரிய விதிமுறைகளைப் பேணாத உணவகங்களில் உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X