2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இராணுவ சிப்பாய் தாக்கியதில் ஒருவர் மரணம்

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 09 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

இராணுவ சிப்பாய் ஒருவர் தம்பதியினரைத் தாக்கியதில் கணவர் உயிரிழந்துள்ளார் என நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் நாவலப்பிட்டி-இங்குருஓயாவைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (8) காலை 11 மணியளவில் இங்குருஓயா உடைந்த பாலத்துக்கு அருகில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.

சந்தேகநபர் ஆற்றுக்கு அருகில் மூங்கிலை வெட்டிக்கொண்டிருந்த போது, தம்பதிகளில் அந்த பாதை வழியாக சென்றுள்ளனர்.

இதன்​போது மூவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இராணுவ சிப்பாய் தடியொன்றினால் கணவனையும் மனைவியையும் தாக்கியுள்ளார்.

இதன்போது அயலவர்களால் கணவனும் மனைவியும் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, கணவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு நேற்று (8) மாலை  உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபர் பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளதுடன், இரு குடும்பத்துக்கும் நீண்டகாலமாக இருந்து வரும் பகையே இந்தச் சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அத்துடன் சந்தேகநபரைக் கைதுசெய்வதற்கான விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .