மொஹொமட் ஆஸிக் / 2020 மே 25 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய மாகாணத்தில் நீடித்துவரும் சீரற்ற வானிலை காரணமாக, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில், இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு, தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக, கண்டி மாவட்டத்தில் கங்கஇஹல கோரள பிரதேச செயலாளர் பிரிவுக்கும் நுவரெலியா மாவட்டத்தில் அம்கமுவ பிரதேச செயலாளர் பிரிவுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுக்கு, இரண்டாவது முறையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மேற்படி பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள், கற்பாறை சரிதல், மண்மேடு சரிதல், நிலம் தாழிறங்கல் போன்றவை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்கள், மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அதிக மழை பெய்யுமாயின் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
4 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026