2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

இறத்தொட்டைக்கு சிவப்பு எச்சரிக்கை; ’கருங்கல் உடைப்பது இடைநிறுத்தம்’

Editorial   / 2019 டிசெம்பர் 23 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஷ் கீர்த்திரத்ன

மாத்தளை மாவட்டத்தில் நீடித்துவரும் சீரற்ற வானிலை காரணமாக, மண்சரிவு, கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் நிலவுவதால், இறத்தொட்டை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் கருங்கல் உடைக்கும் வேலைத்திட்டங்களை, மறுஅறுவித்தல் வரை இடைநிறுத்துமாறு, இறத்தொட்டை பிரதேச செயலாளர் நிஷாந்த தினப்பிரய ஹேரத் தெரிவித்தார்.

கடும் மழை வானிலையால் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் காரணமாகவே, இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தால் வெளியிடப்பட்ட சிவப்பு எச்சரிக்கைக்கு அமைவாக, மாத்தளை இறத்தொட்டை பிரதேச செயலாளர் பிரிவில், அநேகமான இடங்களில், மண்சரிவு, கற்பாறை சரிவு அபாயம் ஏற்படலாம் என்றும் எனவே, பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும், நிலவெடிப்பு, ஊற்றுநீர் பெருக்கெடுத்தல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படுமாயின், பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .