Gavitha / 2016 மார்ச் 21 , மு.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
இலங்கையில் அம்பியுலன்ஸ் சேவையை ஆரம்பிப்பதற்காக, இந்திய அரசு 7.5 மில்;லியன் அமெரிக்கா டொலர்களை வழங்கவுள்ளதாக, இந்திய உயர் ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா தெரிவித்தார்.
கண்டி மல்வத்த பீடத்தின் மஹாநாயக்க தேரரான வண. திப்படுவாவே ஸ்ரீ சுமங்கள தேரரை சனிக்கிழமை (19) சந்தித்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
'கடந்த வருடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்த போது, இலங்கை அரசு அவரிடம் அம்பியுலன்ஸ் சேவைக்கு உதவுமாறு கோரியிருந்தது. இதன்பிரகாரம், மேல் மற்றும் தென் மாகாணங்களில் அம்பியுலன்ஸ் சேவையை ஆரம்பிப்பதற்கு முதற் கட்ட உதவியாக 7.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது' என்று அவர் கூறினார். மேலும், 'இச்சேவைக்கு தேவைப்படும் 600 ஊழியர்களும் இலங்கையர்களில் இருந்தே சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதுடன், அவர்களுக்கு இந்தியா, ஹைதராபாதில் பயிற்சிகள் அளிக்கவுள்ளது' என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதே நேரம் இலங்கை இந்தியாவுடன் கைச்சாத்திடவுள்ள எட்கா ஒப்பந்தம், தற்போது இந்திய அரசிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் இந்தியாவின் பரிசீலனையையடுத்து இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
45 minute ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
13 Apr 2026