Janu / 2024 பெப்ரவரி 12 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொகவந்தலாவ பேருந்து நிலையததிற்கு முன்பாக கத்தி குத்து தாக்குதலுக்குள்ளான நிலையில் இளைஞன் ஒருவர் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் திங்கட்கிழமை (12) பதிவாகியுள்ளது .
குறித்த இளைஞன் பொகவந்தலாவ பேருந்து நிலையத்தில் தனது நண்பர்களுடன் நின்று கொண்டிருந்த போது பொகவந்தலாவ பெற்றோசோ தோட்டப்பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவன் குறித்த இளைஞனை கத்தியால் குத்தியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது
கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞன் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருதோடு குறித்த இளைஞனுக்கு உடம்பின் பின்பகுதியில் பலத்தகாயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
மேலும் இச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை கைது செய்து மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
எ.சதீஷ்

29 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago