Kogilavani / 2021 மார்ச் 04 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியா மாட்டத்தில் இளைஞர்களிடையே போதைப் பொருள், மதுபாவனை அதிகரித்துவருவதால் இளம் வயதினரின் இறப்பு வீதம் அதிகரித்துவருவதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், நுவரெலியா மாவட்டத்தில் பல தோட்டப் பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக இயற்கை மரணங்களும் அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நுவரெலியா மாவட்டத்துக்கு உட்பட்ட வலப்பனை, இராகலை, நுவரெலியா, கந்தப்பளை, நானுஓயா, தலவாக்கலை, அக்கரப்பத்தனை, வெலிமடை, பண்டாரவளை ஆகிய தோட்டப் பகுதிகளிலேயே, கடந்த ஒருவாரத்தில் அதிகளவான இயற்கை மரணங்கள் பதிவாகியுள்ளன.
28 வயது முதல் 45 வரையானோரும் 50 வயது முதல் 75 வயதுக்கு உட்பட்டோரும் நாள் ஒன்றுக்கு மூன்று அல்லது ஐந்துக்கு குறையாமல் மரணமடைந்துள்ளமை பதிவாகியுள்ளது.
மாரடைப்பு, மூச்சுத்திணறல், நிமோனியா, சக்கரைநோய், குருதி அமுக்கம், முடக்குவாதம் போன்ற இன்னும் பல நோய்களாலும் நாளுக்கு நாள் குறித்த தோட்டப் பகுதிகளில் இயற்கை மரணங்கள் சம்பவிக்கின்றன.
இது தொடர்பில் நுவரெலியா மாவட்ட வைத்திய அதிகாரிகளிடம் வினவியபோது, நுவரெலியா மாவட்ட பிராந்திய சுகாதார பிரிவுகளில் காணப்படுகின்ற தோட்டப் பகுதிகளில், இயற்கை மரணச் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்தே காணப்படுகின்றன என்றார்.
குறிப்பாக இளம் வயதான ஆண்களின் இறப்பு வீதம் சற்று அதிகரித்தே காணப்படுவதாகத் தெரிவித்தார்.
பீடி புகைத்தல், புகையிலை சாப்பிடுதல், தேவையற்ற போதைப் பொருட்கள் பாவனை காரணமாக, இளம் வயது ஆண்களின் மரணம் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
புற்றுநோய் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் ஒன்பது உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன என்றும் இவ்வாறு உயிரிழந்தவர்களில் இளைஞர்களே அதிகளவில் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026