Editorial / 2020 பெப்ரவரி 05 , பி.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலங்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இல 824சி.ரொபட் குனவர்தன வீதி, மாலம்பே பகுதியில் உள்ள வீட்டுக்கு அருகிலிருந்து, உடற்கருகிய நிலையில், பெண்ணொருவரின் சடலம், திங்கட்கிழமை (3) மீட்கப்பட்டுள்ளது.
லிந்துலையைச் சேர்ந்த அலகுராஜ் சோபா என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேற்படிப் பெண், மாலம்பே பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தொழிபுரிந்து வந்துள்ள நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் தீ வைத்துகொண்டாரா அல்லது அவருக்கு தீ வைக்கப்பட்டதா என்பதுத் தொடர்பில், தலங்கம பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.
பெண்ணின் சடலம் பிரேதப் பரீசோதனைக்காக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
10 minute ago
23 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
23 minute ago
2 hours ago