2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

உணவு ஒவ்வாமையால் அறுவர் பாதிப்பு

Editorial   / 2024 மார்ச் 14 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 உணவு ஒவ்வாமை காரணமாக பசறை ஆரம்ப பாடசாலை மாணவர்கள் குழுவொன்று   பசறை மாவட்ட வைத்தியசாலையில் வியாழக்கிழமை (14) அனுமதிக்கப்பட்டுள்ளதாக நமுனுகுல பொலிஸார் தெரிவித்தனர்.

இம்மாணவர்கள் பாடசாலை வழங்கிய சோறு, கங்குன் கீரை, பருப்பு, கருவாடு கலந்த கிழங்கு பொரியல், ஆகியவற்றின் கலவையை உண்ட பின்னர் மயங்கி விழுந்து பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மாணவர்களில் 6 மாணவர்களும் 3 மாணவிகளும் உள்ளதாகவும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் வைத்தியசாலை அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .