2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

உமாஓயா பாதிப்பு; 8,136 வீடுகளுக்கு இழப்பீடு

Kogilavani   / 2021 மார்ச் 17 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா  
 
உமாஓயா அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்ட, சேதமடைந்த 8,738 வீடுகளில் 8,136 வீடுகளுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
 
602 வீடுகளுக்கு மட்டுமே இழப்பீடுகள் வழங்கப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
 
இது தொடர்பில், அமைச்சரவைப் பத்திரமொன்றை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
உமாஓயா அபிவிருத்தித் திட்டத்தினால் வசிப்பிட, வாழ்வாதார காணிகளை இழந்தவர்களுக்கு எல்ல பிரதேச செயலகப் பிரிவில் திக்கராவை தோட்டத்தில் நான்கு ஏக்கர் காணியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இக் காணியில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். 
 
அத்துடன், பண்டாரவளை பிரதேச செயலகப் பிரிவில், மல்வத்தவெளி பிளான்டேசன் பொறுப்பிலுள்ள பெருந்தோட்டத்தில் 10 ஏக்கர் காணியும் சுவீகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X