2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

உலக முடிவிலிருந்து வீசப்பட்ட சாரதியின் சடலம் மீட்பு

Janu   / 2024 ஒக்டோபர் 16 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடித்துக் கொன்று சிறிய உலக முடிவிலிருந்து பள்ளத்திற்கு வீசப்பட்ட ஹாலி எல ரொசெட்வத்தையைச் சேர்ந்த 23 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதியின் சடலம் 16 நாட்களுக்கு பின்னர் புதன்கிழமை (16)   கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மடுல்சீம பொலிஸார் தெரிவித்தனர்.

 வெல்லவாய குடா ஓயா இராணுவ  முகாமின் கமாண்டோ அதிகாரிகள் குழுவொன்று கயிறுகளின் உதவியுடன் புதன்கிழமை (16) பிற்பகல் மடுல்சீம சிறிய உலக முடிவின் பள்ளத்தில் இறங்கி மேற்கொண்ட சோதனையின் போது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

சடலத்தை உரப் பையில் கட்டி கயிறு, மூலம் பெரும் முயற்சியுடன்  மேலே எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X