2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

உள்நாட்டு இயந்திரங்களுக்கு தரச்சான்றிதழ்

Kogilavani   / 2021 மார்ச் 02 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

இரத்தினபுரி பல்லெபெத்த பிரதேசத்தைச் சேர்ந்த யூ.சுனில் ஜயரத்ன என்பவர் தயாரித்த தேங்காய் எண்ணெய் தயாரிப்பு, மிளகு உலர்த்தும் இயந்திரங்களுக்கு, விவசாயத் திணைக்கள அதிகாரிகள் தரச்சான்றிதழை அளித்துள்ளனர். 

வெளிநாடுகளிலிருந்து இறக்குமித செய்யும் இயந்திரங்களின் தரத்தைவிட நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மேற்படி இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்று, விவசாயத் திணைக்கள அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எரி பொருள்களால் மற்றுமன்றி விறகு, உமி போன்றவற்றாலும் இந்த இயங்திரங்களை இயக்க முடியும் என்று, மேற்படி நபர் தெரிவித்துள்ளார்.

மிளகு உலர்த்தும் இயந்திரத்தால், ஒரே தடவையில் 2,000 கிலோகிராம் மிளகை உர்த்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X