Sudharshini / 2016 மார்ச் 15 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
காமினி பண்டார
நாடளாவிய ரீதியில் ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் பெற்றுக்கொடுக்கும் செயற்றிட்டத்துக்கு நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் இச்சங்கத்தினர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
'ஊடகவியலாளர்களைக் கடனாளியாக்கும் செயற்பாட்டையே நல்லாட்சி அரசாங்கமும் இலங்கை ஊடகத் திணைக்களமும் இணைந்து மேற்கொண்டுள்ளன. ஆரம்பத்தில் அரசாங்கம், அரச ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கிய முறையின் கீழ், ஊடகவியலாளர்களுக்கும் மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கு உடன்பட்டுவிட்டு, தற்போது தவணைமுறையிலான பணம் செலுத்திப் பெறுவதற்கான செயற்றிட்டத்தை முன்னெடுத்துள்ளது' என தெரிவித்தனர்.
'இக்கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், ஓர் ஊடகவியலாளர் மாதாந்தம் 5,000 ரூபாயை விடவும் அதிகமான தொகையைச் செலுத்த வேண்டும். அதைவிடவும் மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தும் விதத்திலும் அதற்கென வேறாக கட்டணத்தை ஊடகவியலாளர்கள் செலுத்த வேண்டும். இதனால், நாங்கள் இத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றோம்' என சங்கத்தினர் குறிப்பிட்டனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago