2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

ஊழியர் சடலமாக மீட்பு

Kogilavani   / 2021 மார்ச் 09 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.புவியரசன்

புத்தல பெல்வத்த சீனி தொழிற்சாலையில் தொழில்புரியும் நபரொருவர், நேற்று முன்தினம் (9) சடலாமாக மீட்கப்பட்டுள்ளார். 

நமுனுகுல யாலராவ, தேவந்துர கிராமத்தைச் சேர்ந்த 42 வயது நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படித் தொழிற்சாலையில் பணிப்புரியும் தொழிலாளர்கள், நேற்று முன்தினம் (8) காலை, லொறியொன்றில் தொழிற்சாலைக்குப் பயணித்துள்ளனர். 

இயந்திரக் கோளாறு காரணமாக, லொறி இடைநடுவில் பழுதடைந்துள்ளது.

இதனால் தொழிலுக்கு சென்றவர்கள் மீண்டும் தமது வீடுகளுக்குச் செல்ல லொறியில் இருந்து இறங்கியுள்ளனர். 

மரணமடைந்த நபர், தாம் இயற்கை கடன் கழிக்க வேண்டுமெனக் கூறி உடன் வந்தவர்களை செல்லுமாறு கூறியுள்ளார். 

நீண்ட நேரமாக அவரை காணாத நண்பர்கள், குறித்த இடத்துக்குச் சென்று பார்த்தபோது அவர் இறந்து கிடந்துள்ளார். 

பிரேதப் பரிசோதனைக்காக பசறை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில், பசறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X