2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இல்லை

Gavitha   / 2020 டிசெம்பர் 02 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி மாநகர சபைக்குட்பட்ட கட்டுகஸ்தோட்டை பொருளாதார நிலையத்தில் பணிபுரியும் 60 தினசரி தொழிலாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் முடிவில், 60 பேருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது என, கட்டுகஸ்தோட்டை பொருளாதார நிலையத்தில் வர்த்தக சங்கத் தலைவர் டீ.எம்.சில்வா தெரிவித்தார்.

கண்டி பொதுச் சந்தையில் இருந்து, தொற்றாளர்கள் பலர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, கட்டுகஸ்தோட்டை வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பிசிஆர் பரிசோதனை எடுக்கப்பட்டது.

அத்துடன் வர்த்தக நிலையத்தில் தொழில்புரியும் மேலும் 100 ஊழியர்களுக்கு பிசிஆர் பரிசோதனை நடத்துமாறு, வர்த்தக சங்கத் தலைவர் டீ.எம்.சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X