2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

ஊவா மாகாண சபையின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் சமர்ப்பிப்பு

Sudharshini   / 2015 டிசெம்பர் 14 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்:செல்வராஜ்

ஊவா மாகாண சபையின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட நிதி அறிக்கை இன்று(14), மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

மாகாணத்தின் மொத்த வருமானமாக 2,685 மில்லியன் ரூபாய் எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் மொத்த செலவீனமாக 22,979 மில்லியன் ரூபாய் மதிப்பிடப்பட்டிருப்பதாகவும் நிதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், 475 மில்லியன் ரூபாய் நிதி, மத்திய அரசினால் ஊவா மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஊவா மாகாணத்தின் முழுமையான கல்வித்துறை அபிவிருத்திக்கென 1,342 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

 'அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' என்ற வேலைத்திட்டத்தின் கீழ், ஊவா மாகாணத்தின் 200 பாடசாலைகள் துரிதமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. ஆசிரியர்கள் திருப்திப்படக் கூடிய வகையில் ஆசிரியர் இடமாற்றக் கொள்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

பாடசாலை கடமை வேளையில் ஆசிரியர்களும் மாணவ, மாணவியர்களும் அலைபேசி பாவனையை தவிர்த்தக்கொள்ளல் வேண்டும். மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளிலும் ஒழுக்கம்பற்றி கவனிப்பதற்கு ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களின் உழைப்பு, அர்ப்பணிப்பு என்பவைகள் தொடர்பாகவும் கணிப்பீடு செய்யப்பட வேண்டியது அவசியமாகும். பாடசாலைகளில் அதிசிறந்த பெறுபேருகளை ஏற்படுத்தும் அதிபர், ஆசிரியர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலாவொன்றும்  ஏற்பாடு செய்யபட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .