2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஊவா மாகாணத்தில் மாற்றத்துக்கு இடமில்லை

Kogilavani   / 2015 நவம்பர் 06 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா

ஊவா மாகாணத்தில் ஆட்சி மாற்றத்துக்கு இடமளிக்கபோவதில்லை என ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.

'மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம், ஊவா மாகாண ஆட்சி அமைந்துள்ளது. இன்னும் நான்கு வருட காலங்களுக்கு எமது கட்சியே ஊவா மாகாண சபையில் ஆட்சியை நடத்தும். அவ் ஆட்சியில் நானே முதலமைச்சராக கடமையாற்றி, எமது மாகாண மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவேன். இனிமேல், எவ்வகையிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட இடமளியோம்' என்றும் அவர் கூறினார்.

ஊவா மாகாண இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை, கலாசார அமைச்சரான சாலிய சுமேத சில்வாவின் பதவியேற்பு நிகழ்வு ஊவா மாகாண சபை கேட்போர் கூடத்தில் புதன்கிழமை(4) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'நாடாளுமன்றப் பதவியைவிட்டுவிட்டு, மாகாணத்துக்கு தான் திரும்பியமை குறித்து, ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரொருவர்;, நான் மடமையான வேலையை செய்துவிட்டதாகவும், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து பெறும் ஓய்வூதியப் பணத்தையும் இழந்துவிட்டதாகவும் கூறினார். ஓய்வூதியம் என்பது எனக்கு அவசியமில்லை' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .