2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

ஊவாவுக்கு புதிய உறுப்பினர்கள்

Kogilavani   / 2016 ஜனவரி 08 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.செல்வராஜா, பாலித ஆரியவன்ச

ஊவா மாகாண சபையின் புதிய உறுப்பினர்களாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் உப தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான எம்.சச்சிதானந்தன் மற்றும் பிரகதி அனுசல்யா ஆகியோர், ஊவா மாகாண ஆளுநர் எம்.பி.ஜயசிங்க முன்னிலையில் நேற்று (7) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

ஊவா மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் உறுப்பினர் ரவி சமரவீர ஆகிய இருவரும் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடங்களுக்கே மேற்படி இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவ்விருவரும் நேற்று நடைபெற்ற ஊவா மாகாண சபை அமர்விலும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .