Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 21 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
உமாமகேஸ்வரன்
தற்போதைய அரசியல் சூழ்நிலையில், எதிர்க்கட்சிகளின் வகிபாகத்தை, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தனது கையில் எடுத்துள்ளார் என்று, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கலவான தேர்தல் தொகுதியின் அமைப்பாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஜானக்க வக்கும்புற குற்றஞ்சாட்டினார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்டக் காரியாலயத்தில், நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், பொதுத்தேர்தலை ஒத்திவைக்கும் பின்னணியில், எதிர்க் கட்சிகளின் அரசியல் நோக்கத்தை, ஆணைக்குழுவின் தலைவர் நிறைவேற்றி வருகின்றார் என்றும் மார்ச் மாதம் 19ஆம் திகதி பொதுத்தேர்தலின் வேட்புமனுத்தாக்கலின் பின்னர் 5 வாரங்களில் தேர்தலை நடத்த தம்;;மால் முடியும் என்றுத் தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, தற்போது 2 மாதங்கள் கடந்த நிலையில்கூட தேர்தலை நடத்த முடியாது என்று கூறுவதன் பின்னணி என்ன எனவும் வினவினார்.
'கொரோனா வைரஸ் அச்சத்தைத் தொடர்ந்து, தேர்தல் ஆணைக்குழு, தேர்தலை நடத்த முடியுமென்று கூறி ஜூன் மாதம் 20 ஆம் திகதிக்கு அதனை ஒத்திவைத்தது எனினும் தற்போது தேர்தலை நடத்த முடியாதென்று நீதிமன்றில் கூறிவருகின்றது. அன்றே இதனைக்கூறியிருந்தால், இன்று எதர்க்கட்சிகள் நீதிமன்றத்தை நாடியிருக்க மாட்டார்கள். தோத்ல் ஆணைக்குழு, சிறுப்பிள்ளைத்தனமாக பொதுத்தோதல் தொடர்பில் தினம் தினம் வௌ;வேறு கருத்துகளை கூறிவருகின்றது' என விமர்சித்தார்.
தேர்தல் ஆணைக்குழுவின் இந்தச் செயற்பாடானது, எதிர்க்கட்சிகளின் நோக்கத்தை நிறைவேற்றுவதாகவே கருத வேண்டியுள்ளது என்றும் தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சுதந்திர ஆணைக்குழுகள் பல, சுயாதீனமாகச் செயற்படுவதில்லை என்றும் குறிப்பாக தேர்தல் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு என்பன தன்னிச்சையாக செயற்படுவதாகக் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் திணைக்களம் தமது வகிபாகத்தை விடுத்து எதிர்க்கட்சிகளின் வகிபாகங்களை செய்து வருகின்றது என்றும் எனவே இவ்விடயம் தொடர்பில், நேர்மையான அரசியல்வாதி என்ற ரீதியில், மிகவும் வேதனையடைவதாகவும் அவர் தெரிவித்தார்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago