2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

Janu   / 2025 செப்டெம்பர் 01 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரவளை,பள்ளகெட்டுவ - நமுனுகல வீதியில் உள்ள ஹிந்தகல தேயிலைத் தோட்டத்தில் உள்ள தரமடுவ என்ற இடத்திற்கு அருகில் இருந்து எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் திங்கட்கிழமை (1) காலை மீட்கப்பட்டதாக பண்டாரவலை, பொலிஸ் நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த தேயிலைத் தோட்டத்தில் சேவைக்காக சென்ற ஒருவரே சடலத்தை கண்டு இது தொடர்பாக பள்ளகெட்டுவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்துள்ளதாக பள்ளகெட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பண்டாரவளை, உயர் பொலிஸ் கண்காணிப்பாளர், வழக்கறிஞர் ரோஷன் அமரசிங்கவின் அறிவுறுத்தலில் பள்ளகெட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாலித்த ஆரியவங்ச


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .